ஆத்திசூடி

ஆத்திசூடியின் மூலமும் உறையும். (Aathichoodi explanations are in Tamil, English and Spanish too)

உயிர் வருக்கம்

1. அறஞ்செய விரும்பு. 

நீ தருமம் செய்ய ஆசைப்படு. 

Have desire to do good deeds.

Ten el deseo de hacer buenas obras.

2. ஆறுவது சினம்.

கோபம் தணியத் தகுவதாம்.

Anger should be reduced / controlled.

La ira debe ser reducida y controlada.

 3. இயல்வது கரவேல். 

கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 

Help to your best possible extent

Ayuda en la medida que te sea posible

4. ஈவது விலக்கேல்.

ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே.

Don’t stop doing charity

No dejes de hacer caridad.

5. உடையது விளம்பேல்.

உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே.

 உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

Do not boast about your possession.

No te jactes de tus posesiones.

6. ஊக்கமது கைவிடேல்.

நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே. (அது: பகுதிப்பொருள் விகுதி.)

Do not give up hope/self-confidence.

No pierdas la esperanza, confía en ti mismo.

7. எண்ணெழுத் திகழேல்.

கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள். (கணிதம் - கணக்கு.)

Do not underestimate the power of learning.

No subestimes el poder del aprendizaje.

 8. ஏற்ப திகழ்ச்சி. 

இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே. 

To accept alms is a shameful act.

Aceptar limosnas es un acto vergonzoso.

9. ஐய மிட்டுண்.

இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு.  ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.

Before eating, share food with those who need.

Antes de comer, comparte tus alimentos con quienes lo necesitan.

10. ஒப்புர வொழுகு.

உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

Follow the trend / Act with high moral standards.

Ponte a la altura, actúa con altos estándares morales.

11. ஓதுவ தொழியேல்

அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

Never stop learning.

Nunca pares de aprender.

12. ஒளவியம் பேசேல்.

நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

Never envy / talk bad about others.

Nunca envidies, ni hables mal de otros.

13. அஃகஞ் சுருக்கேல்.

மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.

Do not be stingy in selling food grains.

No seas mezquino en la venta de alimentos.

 

உயிர்மெய் வருக்கம்

14. கண்டொன்று சொல்லேல்.
கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே. (பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)

Tell exactly what you saw.

Di exactamente lo que viste.

15. ஙப்போல் வளை.

ங என்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள்.
  [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]

Preserve the bonds.

Conserva los bonos.

16. சனிநீ ராடு.

சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்து முழுகு.(புதன்கிழமைகளிலும் முழுகலாம்.)

Shower with clean cold water.

Báñate con agua limpia y fría.

17. ஞயம்பட வுரை.

கேட்பவர்களுக்கு இன்ப முண்டாகும்படி இனிமை யாகப் பேசு. [நயம் என்பதன் போலி.]

Speak nice and sweet.

Habla con amabilidad y dulzura.

18. இடம்பட வீடெடேல்

அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடககும்படி வீட்டைப்பெரிதாகக் கட்டாதே. ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

Build your house meeting your needs.

Construye tu casa satisfaciendo tus necesidades.

19. இணக்கமறிந் திணங்கு

நற்குண நற்செய்கை உடையவ ரென்பது தெரிந்து கொண்டு ஒருவரோடு நட்புச் செய.

Make friend with the best (behaviour and character).

Haz amistad con quien tenga un buen comportamiento y un buen carácter.

20. தந்தைதாய்ப் பேண்

உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

Care and protect your parents.

Cuida y protege a tus padres.

21. நன்றி மறவேல்.

உனக்குப் பிறர் செய்த நன்மையை எப் பொழுதும் மறக்காமல் தீமையை மறந்துவிடு. 
  உதவி செய்தவர்க்கு ஒருபொழுதும் தீமை செய்தலாகாது.

Do not forget timely help offered / gratitude.

No olvides ofrecer ayuda y gratitud de manera oportuna.

22. பருவத்தே பயிர்செய்.

விளையும் பருவமறிந்து பயிரிடு. 
  எச்செயலும் அதற்குரிய காலத்திலே செய்யப்படவேண்டும்.

Do things in the right time.

Haz las cosas en el momento adecuado.

23. மன்றுபறித் துண்ணேல்.

நீதிமன்றத்திலே இருந்துகொண்டு இலஞ்சம் வாங்கி வாழாதே.
  'மண்பறித் துண்ணேல்' என்று பாடமிருந்தால் பிறர் நிலத்தைக் கவர்ந்து வாழாதே என்று பொருளாம்.

Do not grab other’s land for your needs.

No tomes la tierra de otros para saciar tus necesidades.

24. இயல்பலா தனசெயேல்.

நல்லொழுக்கத்திற்கு மாறான செயல்களைச் செய்யாதே.

Do not involve yourself in bad deeds.

No te involucres en malas acciones.

25. அரவ மாட்டேல்.

பாம்பைப் பிடித்து ஆட்டி விளையாடாதே.

Do not play with snakes.

No juegues con serpientes.

26. இலவம்பஞ்சிற் றுயில்.

இலவம்பஞ்சினாற் செய்த மெத்தையிலே படுத்து உறங்கு.

Sleep on silk cotton bed.

Duerme en camas de algodón de seda.

27. வஞ்சகம் பேசேல்.

கபடச் சொற்களைப் பேசாதே.

Do not utter mean / cunning words.

No pronuncies palabras mal intencionadas.

28. அழகலா தனசெயேல்.

இழிவான செயல்களைச் செய்யாதே.

Never do unpleasant things.

Nunca hagas cosas desagradables.

29. இளமையிற் கல்.

இளமைப் பருவத்திலேயே படிக்கத்தொடங்கிக் கல்வியைக் கற்றுக்கொள்.

Learn when you are young.

Aprende cuando eres joven.

30. அறனை மறவேல்.

தருமத்தை எப்பொழுதும் மறவாமல் செய்.

Do not forget charity.

No te olvides de la caridad.

31. அனந்த லாடேல்.

மிகுதியாகத் தூங்காதே.

Do not sleep long hours.

No duermas por largas horas.

 

ககர வருக்கம்

32. கடிவது மற. 

யாரையும் கோபத்தாற் கடிந்து பேசாதே. 

Never hurt people with bad words. 

Nunca lastimes a otros con malas palabras. 

33. காப்பது விரதம். 

பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமல் (அவற்றைக்) காப்பாற்றுவதே தவமாகும்.  தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமற் செய்வதே விரதம் என்றும் பொருள் சொல்லலாம். 

Keep up your vows. 

Sostén tu palabra. 

34. கிழமைப் படவாழ். 

உன் உடம்பாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழு. 

With your health and wealth, do best to others.

Haz cosas buenas por los demás con tu salud y riqueza. 

35. கீழ்மை யகற்று. 

இழிவான குணஞ் செயல்களை நீக்கு. 

Stay out of vulgar actions. 

Mantente alejado de los actos vulgares.

36. குணமது கைவிடேல். 

நற்குணங்களைக் கைசோரவிடாதே. நன்மை தருவ தென்று கண்டறிந்ததைக் கைவிடாதே. அது: பகுதிப்பொருள் விகுதி. 

Don’t give up good character. 

No abandones el buen carácter.

37. கூடிப் பிரியேல். 

நல்லவரோடு நட்புச் செய்து பின்பு அவரை விட்டுப் பிரியாதே. 

Do not give up good friends. 

No abandones a los buenos amigos.

38. கெடுப்ப தொழி. 

பிறருக்குக் கெடுதி செய்வதை விட்டுவிடு (கேடு விளைக்கும் காரியத்தைச் செய்யாதே.) 

Do not involve in actions that creates trouble for other. 

No te involucres en acciones que le traigan problemas a otros.

39. கேள்வி முயல். 

கற்றறிந்தவர்கள் சொல்லும் நூற் பொருளைக்கேட்க முயற்சி செய். 

Listen to good and valuable advice. 

Escucha los consejos buenos y valiosos.

40. கைவினை கரவேல். 

உனக்குத் தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு ஒளியாமற் செய்.  (ஏதேனும் கைத்தொழில் செய்துகொண்டிரு.) 

Do not hide knowledge about handicrafts. 

No escondas el conocimiento sobre la artesanía. 

41. கொள்ளை விரும்பேல் 

பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பாதே. 

Do not rob. 

No robes. 

42. கோதாட் டொழி. 

குற்றமான விளையாட்டை விட்டுவிடு. கோதாட்டொழி என்பதன்பின் 'கௌவை யகற்று, என்று ஒரு கட்டுரை சில புத்தகங்களில் உள்ளது. 'துன்பத்தை நீக்கு' என்பது இதன் பொருள். 

Leave playing illegal games. 

Deja de jugar juegos ilegales.

 

சகர வருக்கம்

43. சக்கர நெறிநில்.

அரசன் கட்டளை வழியில் அடங்கி நட.

Follow your government rules.

Sigue las reglas de tu gobierno.

44. சான்றோ ரினத்திரு.

அறிவொழுக்கங்களில் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தைச் சேர்ந்திரு.

Associate with scholars / wise people.

Relaciónate con eruditos / personas sabias.

45. சித்திரம் பேசேல்.

பொய் வார்த்தைகளை மெய்போலப் பேசாதே.

Do not speak lie as truth.

No digas mentiras cómo si fuesen verdades.

46. சீர்மை மறவேல்.

புகழுக்குக் காரணமானவற்றை மறந்துவிடாதே.

Do not forget righteousness.

No te olvides de la rectitud.

47. சுளிக்கச் சொல்லேல்.

கேட்பவர்க்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதே.

Do not use hurting words.

No uses palabras que puedan ser dolorosas.

48. சூது விரும்பேல்.

ஒருபொழுதும் சூதாடுதலை விரும்பாதே.

Don’t be interested in gambling.

No te intereses en los juegos de azar.


49. செய்வன திருந்தச்செய்.

செய்யுஞ் செயல்களைத், திருத்தமாகச் செய்.

Do things with perfection.

Haz las cosas con perfección.

50. சேரிடமறிந்து சேர்.

சேரத்தக்க நல்லிடத்தை ஆராய்ந்தறிந்து சேர்.

Choose wise company / friends.

Elige la compañía o amistad de personas sabias.

51. சையெனத் திரியேல்.

பெரியோர் சீ என்று வெறுக்கும்படி வீணாய்த்   திரியாதே

Avoid being insulted because of uselessness.

Evita ser señalado por ser improductivo e incapaz.

52. சொற்சோர்வு படேல்.

நீ பிறருடன் பேசும்பொழுதும் மறந்து குற்றமுண்டாகப் பேசாதே

Do not speak conversation with wrong or bad words.

No converses con malas palabras.

53. சோம்பித் திரியேல்.

முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

Don’t be lazy.

No seas perezoso.

தகர வருக்கம்

54. தக்கோ னெனத்திரி.

பெரியோர்கள் உன்னைத் தக்கவன் என்று புகழும்படி நடந்துகொள்.

Let others feel you are trustworthy and good.

Deja que los demás sientan que eres confiable y bueno.

55. தானமது விரும்பு.

தக்கவர்களுக்குத் தானங்கொடுத்தலை விரும்பு.அது: பகுதிப்பொருள் விகுதி

Offer charity and alms.

Ofrece caridad y limosnas.

56. திருமாலுக் கடிமை செய்.

நாராயணமூர்த்திக்குத் தொண்டு செய்.

Serve God.

Sirve a Dios.

57. தீவினை யகற்று.

பாவச் செயல்களைச் செய்யாமல் விலக்கு.

Don’t commit sins.

No cometas pecados.

58. துன்பத்திற் கிடங்கொடேல்.

துன்பத்திற்குச் சிறிதும் இடங்கொடாதே.முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டுவிடலாகாது

Do not allow suffering.

No permitas el sufrimiento.

59. தூக்கி வினைசெய்.

முடிக்கத் தகுந்த உபாயத்தை ஆராய்ந்தறிந்து ஒரு காரியத்தைச் செய்.

Think very well before you act.

Piensa bien antes de actuar.

60. தெய்வ மிகழேல்.

கடவுளை இகழ்ந்து பேசாதே

Do not disregard the supreme divine.

No ignores lo divino.

61. தேசத்தோ டொத்துவாழ்


நீ வசிக்கும் தேசத்தவருடன் பகையில்லாமலபொருந்தி வாழு.

Live and adopt your country’s livelihood.

Vive y adopta el sustento de tu país.

62. தையல்சொல் கேளேல்

மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

Do not trust girl’s words as expressed.

No confíes en las palabras expresadas por una chica tal como ella las expresa.

63. தொன்மை மறவேல்

பழைமையாகிய நட்பினை மறந்துவிடாதே

Do not forget old / past antiquities.

No te olvides del pasado y la antigüedad .

64. தோற்பன தொடரேல்

தோல்வியடையக்கூடிய காரியங்களில் தலையிடாதே.

Should know when to give up if sure of defeat.

Debes saber cuándo rendirte si estás seguro de la derrota.

நகர வருக்கம்

65. நன்மை கடைப்பிடி்

நல்வினை செய்தலை உறுதியாகப் பற்றிக்கொள்.

Stick / Continue doing good deeds.

Continua haciendo buenas obras.

66. நாடொப் பனசெய்

நாட்டிலுள்ளோர் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல செயல்களைச் செய்.

Perform acts that are agreeable to your nation.

Realiza actos que sean del agrado de tu nación.

67. நிலையிற் பிரியேல்.

உன்னுடைய நல்ல நிலையினின்றும் தாழ்ந்துவிடாதே

Don’t give up on principles.

No te rindas ante los principios.

68. நீர்விளை யாடேல்.

வெள்ளத்திலே நீந்தி விளையாடாதே.

Do not play in bigger waters (like dam, river).

No juegues en grandes aguas (Como presas y ríos).

69. நுண்மை நுகரேல்.

நோயைத் தரும் சிற்றுண்டிகளை உண்ணாதே

Do not eat food items that can cause illness.

No comas alimentos que puedan enfermarte.

70. நூல்பல கல்.

அறிவை வளர்க்கும் பல நூல்களையும் கற்றுக்கொள்.

Have desire to learn more.

Ten deseos de aprender más.

71. நெற்பயிர் விளை.

நெற்பயிரை முயற்சியெடுத்து விளையச்செய்.உழுதுண்டு வாழ்வதே மேல்.

Perform agriculture (ex: paddy cultivation).

Siembra y cultiva alimentos .

72. நேர்பட வொழுகு.

ஒழுக்கந் தவறாமல் செவ்வையான வழியில் நட

Be honest and truthful.

Se honesto y confiable.

73. நைவினை நணுகேல்.

பிறர் வருந்தத்தகுந்த தீவினைகளைச்செய்யாதே.

Do not do anything that is destructive.

No hagas nada destructivo.

74. நொய்ய வுரையேல்.

வீணான அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

Do not speak abusive language.

No hables en lenguaje abusivo.

75. நோய்க்கிடங் கொடேல்.

உணவு, உறக்கம் முதலியவற்றால் பிணிக்கு இடங்கொடுக்காதே.

Do not give room for disease.

No des espacio a la enfermedad.


 

பகர வருக்கம்

76. பழிப்பன பகரேல். 
பெரியோர்களாற் பழிக்கப்படுஞ் சொற்களைப் பேசாதே. பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் என்பனவும்; இடக்கர்ச் சொற்களுமாம். 

Do not use vulgar language. 

No uses lenguaje vulgar.
77. பாம்பொடு பழகேல்.

பாம்புபோலும் கொடியவர்களுடன் பழக்கஞ் செய்யாதே.

Keep away from snakes.

Mantente alejado de las serpientes.

78. பிழைபடச் சொல்லேல்.

குற்ற முண்டாகும்படி பேசாதே.

Speak clear with no mistakes.

Habla claro y sin errores.

79. பீடு பெறநில்.

பெருமை யடையும்படியாக நல்ல வழியிலே நில்லு.

Others should honor your actions.

Que otros admiren y honren tus acciones.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்.

அடுத்தவரை ஆதரித்து வாழு.

Protect those who appreciate you.

Protege a quienes te aprecian.

81. பூமி திருத்தியுண்.

பூமியைச் சீர்திருத்திப் பயிர்செய்து உண்ணு.

Cultivate the land and feed.

Cultiva la tierra y alimenta con su fruto.

82. பெரியாரைத் துணைக்கொள்.

பெரியாரைத் துணையாக நாடிக்கொள்.

Seek help from old, great and wise people.

Busca la ayuda de personas mayores y sabias.

83. பேதைமை யகற்று.

அறியாமையை நீக்கிவிடு.

Eliminate ignorance.

Eliminar la ignorancia.

84. பையலோ டிணங்கேல்.

அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

Do not get along with fools.

No te lleves  bien con los tontos.

85. பொருடனைப் போற்றிவாழ்.

பொருளை வீண்செலவு செய்யாமற் பாதுகாத்து வாழு.

Save wealth without wasting unnecessarily.

No gastes innecesariamente y reserva tu fortuna.

86. போர்த்தொழில் புரியேல்.

யாருடனும் கலகம் விளைக்காதே.

Avoid getting into unnecessary trouble scenarios.

Evita enrolarte en escenarios problemáticos.

 

மகர வருக்கம்

87. மனந்தடு மாறேல்.

எதனாலும் மனக்கலக்க மடையாதே.

Do not get mentally disturbed.

No te perturbes mentalmente.

88. மாற்றானுக் கிடங்கொடேல்.

பகைவன் உன்னைத் துன்புறுத்தும்படி இடங்கொடுக்காதே.

Don’t let the enemy succeed you.

No dejes que el enemigo te reemplace.

89. மிகைபடச் சொல்லேல்.

வார்த்தைகளை மிதமிஞ்சிப் பேசாதே.

Do not exaggerate or build up things.

No exageres ni construyas cosas falsas.

90. மீதூண் விரும்பேல்.

மிகுதியாக உணவுண்டலை விரும்பாதே.

Do not eat excessive food.

No excedas en tu alimentación.

91. முனைமுகத்து நில்லேல்.

போர் முனையிலே நின்றுகொண்டிருக்காதே.

Do not start a fight.

No comiences una pelea.

92. மூர்க்கரோ டிணங்கேல்.

மூர்க்கத்தன்மை யுள்ளவர்களுடன் சேர்ந்து பழகாதே.

Do not deal with aggressive / stubborn people.

No lidies con personas agresivas u obstinadas.

93. மெல்லினல்லாள் தோள்சேர்.

பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் சேர்ந்து வாழு. 1. மெல்லியா டோன் சேர்' என்றும் பாடம்.

Be truthful to your wife.

Sé sincero con tu esposa.

94. மேன்மக்கள் சொற்கேள்.

நல்லொழுக்கமுடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

Listen to the words of wise and scholarly people.

Escucha las palabras de personas sabias y eruditas.

95. மைவிழியார் மனையகல்.

பரத்தையர் மனையைச் சேராமல் விலகு.

Keep away from people who are jealous.

Mantente alejado de personas celosas.

96. மொழிவ தறமொழி.

சொல்லுவதை ஐயமின்றித் திருத்தமுறச் சொல்லு.

Utter words with great clarity.

Pronuncia palabras completas y claras.

97. மோகத்தை முனி.

நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்துவிடு.

Have control on your urges.

Ten control sobre tus impulsos.

 

வகர வருக்கம்

98. வல்லமை பேசேல்.

உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

Do not praise your own talents.

No alabes tus propios talentos.

99. வாதுமுற் கூறேல்.

பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.

Do not gossip and get into arguments.

No hables rumores ni entres en chismes.

100. வித்தை விரும்பு.

கல்வியாகிய நற்பொருளை விரும்பு.

Show interest and learn good skills.

Muestra interés y aprende buenas habilidades.

101. வீடு பெறநில்.

முத்தியைப் பெறும்படி சன்மார்க்கத்திலே நில்லு.

Progress for a peaceful life.

Progresa para tener una vida pacifica.

102. உத்தம னாயிரு.

நற்குணங்களிலே மேற்பட்டவனாகி வாழு.

Lead your life with exceptionally good qualities.

Lleva tu vida con cualidades excepcionalmente buenas.

103. ஊருடன் கூடிவாழ்.

ஊராருடன் நன்மை தீமைகளிற் கலந்து வாழு.

Have a sense of unity among the people you live with.

Genera sentido de unidad entre las personas con las que vives.

104. வெட்டெனப் பேசேல்.

யாருடனும் கத்திவெட்டுப்போலக் கடினமாகப் பேசாதே.

Do not utter harsh or rude words.

No pronuncies palabras fuertes o groseras.
105. வேண்டி வினைசெயேல்.

வேண்டுமென்றே தீவினைகளைச் செய்யாதே.

Do not purposely commit sins / bad deeds.

No cometas pecados o malas acciones intencionalmente.

106. வைகறைத் துயிலெழு.

நாள்தோறும் சூரியன் உதிக்குமுன்பே தூக்கத்தைவிட்டு எழுந்திரு.

Get up from bed early in the morning.

Levántate de la cama temprano en la mañana.

107. ஒன்னாரைத் தேறேல்.

பகைவரை நம்பாதே.
  'ஒன்னாரைச் சேரேல்' என்றும் பாடமுண்டு.

Do not trust your enemy.

No confíes en tu enemigo.

108. ஓரஞ் சொல்லேல்.

எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாகப் பேசாமல் நடுவுநிலையுடன் சொல்லு.

Do not give a biased opinion / judgement.

No des opiniones imparciales o juicios sesgados.

 

தமிழ்வழி வாழ்ந்து முன்னேறுவோம்!

நன்றி!

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.