நோக்கம்

வணக்கம்!

அன்று புலவர்களால் எப்படி ஒரு நாட்டின் அரசனை நேருக்கு நேராகக் கேள்வி கேட்க முடிந்தது? எப்படி பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு இனம் உலகத்திற்கு ஏற்றவாறு வளர்ந்து இன்றும் இனப்பெருமையை சூடிக்கொண்டிருக்கிறது?

தமிழ் ஒரு வெறும் தகவல்களைப் பரிமாறும் மொழியாக மட்டும் விளங்காமல், அதனுள்லே பல்வேறு அதிசயங்களை அடக்கியுள்ளது. இயற்கை, அறிவியல், கணிதம், பொறியியல், மருத்துவம், வாழ்வியல் முறை, அன்பு, பண்பு, கலைகள், முன்னேற்றப்பாதை, அறநெறி, காதல் என கலந்து ஒரு உணர்வு மொழியாக விளங்குகிறது.

தமிழ் மொழி உணர்வு சம்பந்தப்பட்ட மொழி என்பதால் தான் தமிழன், தமிழை உயிர் போல நேசித்தான். எக்காலமும், எவ்வினத்தாரும் பயன்படும் வகையில் பல இலக்கியங்களை படைத்தது அவ்வழி வாழ்ந்து வந்தான். தமிழில் புலமை பெற்றவன், அனைத்தயும் அறிந்தவன் என்பதாலே தான் புலவர்களுக்கு அத்தகைய மரியாதைகள்.

இயற்கை சீரழிவுகளாலும், மேற்கத்தைய மோகத்தாலும் இன்று சிதைந்து, பல வரலாறுகள் மறைக்கப்பட்டு, பல புதியன கலந்திருந்தாலும், இன்றும் நமக்குள் தமிழ்க் குருதி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் நமக்கு ஒரு தனி அடையாளத்தைக்கொடுத்து ஒரு சுயமரியாதைக்கான இனம் என்று பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

பல்வேறு சமயங்களில் தமிழனின் குணத்தைப் பார்த்து வியக்காதவர்கள் இல்லை. தமிழினம் தொடாத எல்லைகள் இல்லை.
ஆயிரம் இழந்தாலும், சுய மரியாதையும், அடையாளமும் முக்கியம் என்பதை உணர்ந்தவன் தமிழனே!

பணவீக்கம் மற்றும் வர்த்தக உலகத்தின் தாக்கத்தால், தமிழை அனைவராலும் கற்க இயலவில்லையென்றாலும், தமிழன் என்ற பெருமையும், தனித்துவமும் என்றும் நமக்கு குறையவில்லை. காரணம் தமிழும், நமது முன்னோர்களும் உலகம் வியக்கும் பல எண்ணிடலங்கா அறிய செயல்களைச் செய்துவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பொருட்டு நமக்கு பல்வேறு பெருமைகளும், கர்வங்களும்!

தலை நிமிர்ந்து சொல்வோம் நாம் தமிழர்கள் என்று.

பிறப்பால் அனைத்து உயிர்களும் ஒன்றே. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இவ்வுலகில் வாழ சமமான உரிமைகள் இருக்கின்றது.
முதலில் தமிழனாய் இணைவோம். தமிழை வளர்ப்போம், தலைநிமிர்ந்து வாழ்வோம் ஒற்றுமையுடன்.

இந்த இணையதளம் தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிரும் ஓர் இடமாக வளரும்.

வாழ்க தமிழ்!
– தமிழன்