குறிஞ்சிப்பாட்டில் மலர்கள்

பரிபாடலில் உள்ள குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் பெயர்களும் , படங்களும் கீழே.

“ஒண்செங் காந்தள்,ஆம்பல்,அனிச்சம்,
  தண்கயக் குவளை,குறிஞ்சி,வெட்சி,
 செங்கொடு வேரி,தேமா,மணிச்சிகை,
 உரிதுநாறு,அவிழ்தொத்து உந்தூழ்,கூவிளம்,
 எரிபுரை,எறுழம்,சுள்ளி,கூவிரம்,
 வடவனம்,வாகை,வான்பூங் குடசம்,
எருவை,செருவிளை,மணிப்பூங் கருவிளை,
பயினி,வானி,பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி,வகுளம்,பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை,வேரல்,சூரல்,
குரீஇப் பூளை,குறுநறுங் கண்ணி,
குருகிலை,மருதம்,விரிபூங் கோங்கம்,
போங்கம்,திலகம்,தேங்கமழ் பாதிரி,
செருந்தி,அதிரல்,பெருந்தண் சண்பகம்,
கரந்தை,குளவி,கடிகமழ் கலிமாத்
தில்லை,பாலை,கல்இவர் முல்லை,
குல்லை,பிடவம்,சிருமா ரோடம்,
வாழை,வள்ளி,நீள்நறு நெய்தல்,
தாழை,தளவம்,முள்தாள் தாமரை,
ஞாழல்,மெளவல்,நறுந்தண் கொகுடி,
சேடல்,செம்மல், சிறுசெங் குரலி,
கோடல்,கைதை,கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி,மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர்,மராஅம்,பல்பூந் தணக்கம்,
ஈங்கை,இலவம்,தூங்குஇணர்க் கொன்றை,
அடும்பு,அமர் ஆத்தி,நெடுங்கொடி அவரை,
பகன்றை,பலாசம்,பல்பூம் பிண்டி,
வஞ்சி,பித்திகம்,சிந்து வாரம்,
தும்பை, துழாஅய்,சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி,நறவம்,நறும் புன்னாகம்,
பாரம்,பீரம்,பைங்குருக் கத்தி,
ஆரம்,காழ்வை,கடிஇரும் புன்னை,
நரந்தம்,நாகம்,நள்ளிருள் நாறி,
மாஇருங் குருந்தும்,வேங்கையும் பிறவும்,
அரக்குவிரித் தன்ன பருஏர் அம் புழகுடன்,
மால்அங்கு உடைய மலிவனம் மறுகி”

 

 

குறிப்பு: மேலே உள்ள படங்கள் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அதனால் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. சில படங்களை இந்த இணையதளத்தில் பார்க்க முடிந்தது ( http://www.flowersofindia.net )

நன்றி!

 

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.