தொகைச் சொற்கள்

தொகைச் சொல்:  தொகைச்சொல் என்பது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் ஆகும்.

இருவினை 
நல்வினை, தீவினை

இருதிணை
உயர்திணை , அஃறிணை

முத்தமிழ்
இயல், இசை, நாடகம்

முக்கனி
மா, பலா, வாழை

மூவேந்தர் :
சேரன்
சோழன்
பாண்டியன்

நாற்குணம்
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்)

அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடிப்பு (ஆண்)

ஐம்பொன்
இரும்பு, வெள்ளி, செம்பு, ஈயம், பொன்

ஐம்புலன்
சுவை, ஒலி, ஊரு(தொட்டு), ஓசை, நாற்றம்

ஐம்பூதங்கள்
நிலம்
நிர்
நெருப்பு
காற்று
ஆகாயம்

அறுசுவை
இனிப்பு, கசப்பு , புளிப்பு , துவர்ப்பு , கார்ப்பு, உவர்ப்பு

எண்வகை மெய்ப்பாடுகள்:
நகை
அழுகை
இளிவரல்
மருட்கை
அச்சம்
பெருமிதம்
வெகுளி
உவகை

ஏழு பருவம்(பெண்)
பேதை
பெதும்பை
மங்கை
மடந்தை
அரிவை
தெரிவை
பேரிளம்

ஏழு பருவம்(ஆண்)
பாலன்
மீளி
மறவோன்
திறவோன்
விடலை
காளை
முதுமகன்

 

உங்கள் கருத்துகளை அன்புடன் வரவேற்கிறேன்!

நன்றி!
-சமரசம்

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.