கீரைகளும் பயன்களும்

வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனுக்குக் கொடுஎன்ற பழமொழியை இனி அனைவரும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
மீண்டும் இயற்கை உணவு முறைகளுக்குச் சொல்வோம். கீழுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

  கீரைகளும் பயன்களும்:
 அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
 காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
 சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
 பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
 கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
 மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
 குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
 அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
 புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
 பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
 பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
 பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
 சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
 வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
 முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
 வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
 முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
 புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
 புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், உணவு செரிமானப் பிரச்சனையை நீக்கும்.
 நஞ்சுமுண்டான் கீரை- நஞ்சை முறிக்கும்.
 தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
 முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
 பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
 புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
 மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
 மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
 முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
 சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
 வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
 தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
 தவசிக்கீரை- இருமலை போக்கும்.
 சாணக்கீரை- காயம் ஆற்றும்.
 வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
 விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
 கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
 துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
 துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
 காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
 மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
 நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

 

குறள் 944:

"அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து"

உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை உண்ண வேண்டும்.
Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.