ஓரெழுத்துச் சொற்கள்:

தமிழ் மொழியின் மற்றொரு சிறப்பு “ஓரெழுத்தொருமொழி”. அதாவது ஒற்றை எழுத்துச் சொற்கள்.
இந்த ஒற்றை எழுத்துச் சொற்களும் “பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்” எனும் நால்வகை பாகுபாட்டில் வந்துவிடும்.


ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)

விளக்கம்:
ஓரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரைக்கு மிகாத சொல் 
ஈரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரைக்கு மிகாத சொல் 
இரண்டிறத்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டு மாத்திரையின் மிக்கு ஒலிக்கும் சொல் 

 

எண் ஓரெழுத்துச் சொல் பொருள்
1  எட்டு
2  பசு
3 இந்த’ என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்.
4  கொடு,  பறக்கும் பூச்சி
5  சிவன், ‘உந்த’ என்ற பொருள்படும் சுட்டுப்பெயர்
6  தசை,  இறைச்சி
7 எந்த’ என்ற பொருள்படும் கேள்விப்பெயர்.
8  ஏவுதல், அம்பு
9  நுட்பம், ஐந்து,  அழகு,  தலைவன்,  வியப்பு
10  சென்று தங்குதல், வினா,  மதகு – நீர் தாங்கும் பலகை
11 நெருப்பு.
12 கா  சோலை,  காத்தல்
13 கு பூமி
14 கூ கூவுதல்
15 கை  கரம்,  உறுப்பு
16 கோ  அரசன்,  தலைவன்,  இறைவன்
17 கௌ கௌவு’ என்று ஏவுதல்.
18 சா  இறப்பு,  மரணம்,  பேய்,  சாதல்
19 சீ  இகழ்ச்சி,  திருமகள்
20 சே  எருது,  அழிஞ்சில் மரம்
21 சோ  மதில்
22 தா  கொடு,  கேட்பது
23 தீ  நெருப்பு
24 து  கெடு,  உண்,  பிரிவு,  உணவு,  பறவை இறகு
25 தூ  வெண்மை,  தூய்மை
26 தே  நாயகன்,  தெய்வம்
27 தை  மாதம், தையல் எனப்படும் பெண்
28 சிறப்பு.
29 நா  நாக்கு
30 நீ முன்னிலை ஒருமைப் பெயர்
31 நூ எள்
32 நே  அன்பு,  நேயம்
33 நை  வருந்து,  நைதல்
34 நொ  நொண்டி,  துன்பம்
35 நோ  நோவு,  வருத்தம், வலி
36 நௌ  மரக்கலம், கப்பல்
37 பா  பாட்டு,  நிழல்,  அழகு
38 பூ  மலர்
39 பே  மேகம்,  நுரை,  அழகு
40 பை  பாம்புப் படம்,  பசுமை,  உறை
41 போ  செல்
42 மா  மாமரம்,  பெரிய,  விலங்கு
43 மீ  ஆகாயம்,  மேலே,  உயரம்
44 மு  மூப்பு
45 மூ  மூன்று
46 மே  மேன்மை,  மேல்
47 மை  அஞ்சனம்,  கண்மை,  இருள்
48 மோ  முகர்தல்,  மோதல்
49 யா  அகலம்,  மரம்
50 வா  அழைத்தல்
51 வீ  பறவை,  பூ,  அழகு
52 வை  வைக்கோல்,  கூர்மை,  வைதல்,  வைத்தல்
53 வௌ  கௌவுதல்,  கொள்ளை அடித்தல்

 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

(தொல்காப்பியம் .சொல். 157)

நன்றி!
-சமரசம் 

 

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.