தமிழ் எண்கள்

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
 கண்என்ப வாழும் உயிர்க்கு" - குறள் 392 - கல்வி

வாழும் உயிர்களாகிய நமக்கு எண்ணும் எழுத்தும் கண்கள் போன்றவை என அதன் முக்கியத்துவத்தை வள்ளுவர் கூறுகிறார்.

நம் ஓவொருவரும் இந்த உலகத்தில் விழிப்புடன் இருக்க அடிபடைக் கணிதம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தமிழனின் ஒவ்வொரு படைப்பிலும் பல நுட்பமான கணிதங்களும் அறிவியலும் ஒளிந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அக்கணிதத்தின் எண்களுக்கு அன்றே வடிவம் கொடுத்தவன் தமிழன். நமது முன்னோர்களின் அறிய ஆராய்ச்சிகளும் படைப்புகளும் பலரால் மறைக்கப்பட்டு, இன்று நாம் மேற்கத்தைய வழிபாட்டிலேயே கற்கின்றோம். நமது தமிழ் எண்களை சற்று நினைவு கூறுவோம்.

எண் குறிகள்:

ThamizhWestern
1
2

3

4

5

6

7

8
9
10
௰௧11
௰௨ 12
௰௩ 13
௰௪ 14
௰௫ 15
௰௬ 16
௰௭ 17
௰௮ 18
௰௯ 19
௨௰ 20
21

 

NumbersOlipusol
1ஒன்று (ஏகம்)
10பத்து
100நூறு
1000ஆயிரம்(சகசிரம்)
10000பத்தாயிரம்(ஆயுதம்)
1,00,000நூறாயிரம்(இலட்சம் - நியுதம்)
10,00,000பத்து நூறாயிரம்
1,00,00,000கோடி
10,00,00,000அற்புதம்
1,00,00,00,000நிகற்புதம்
10,00,00,00,000கும்பம்
1,00,00,00,00,000கணம்
10,00,00,00,00,000கற்பம்
1,00,00,00,00,00,000நிகற்பம்
10,00,00,00,00,00,000பதுமம்
1,00,00,00,00,00,00,000சங்கம்
10,00,00,00,00,00,00,000வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

இறங்குமுக எண்கள்:

FractionOlippusol
1 ஒன்று
3/4 முக்கால்
1/2 அரை கால்
1/4 கால்
1/5 நாலுமா
3/16 மூன்று வீசம்
3/20 மூன்றுமா
1/8 அரைக்கால்
1/10 இருமா
1/16 மாகாணி(வீசம்)
1/20 ஒருமா
3/64 முக்கால்வீசம்
3/80 முக்காணி
1/32 அரைவீசம்
1/40 அரைமா
1/64 கால் வீசம்
1/80 காணி
3/320 அரைக்காணி முந்திரி
1/160 அரைக்காணி
1/320 முந்திரி
1/102400 கீழ்முந்திரி
1/2150400 இம்மி
1/23654400 மும்மி
1/165580800 அணு
1/1490227200 குணம்
1/7451136000 பந்தம்
1/44706816000 பாகம்
1/312947712000 விந்தம்
1/5320111104000 நாகவிந்தம்
1/74481555456000 சிந்தை
1/489631109120000 கதிர்முனை
1/9585244364800000 குரல்வளைப்படி
1/575114661888000000 வெள்ளம்
1/57511466188800000000 நுண்மணல்
1/2323824530227200000000 தேர்த்துகள்

அளவைகள்

நீட்டலளவு

 10 கோன் – 1 நுண்ணணு
 10 நுண்ணணு – 1 அணு
 8 அணு – 1 கதிர்த்துகள்
 8 கதிர்த்துகள் – 1 துசும்பு
 8 துசும்பு – 1 மயிர்நுணி
 8 மயிர்நுணி – 1 நுண்மணல்
 8 நுண்மணல் – 1 சிறுகடுகு
 8 சிறுகடுகு – 1 எள்
 8 எள் – 1 நெல்
 8 நெல் – 1 விரல்
 12 விரல் – 1 சாண்
 2 சாண் – 1 முழம்
 4 முழம் – 1 பாகம்
 6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
 4 காதம் – 1 யோசனை

பொன்நிறுத்தல்

4 நெல் எடை         – 1 குன்றிமணி
2 குன்றிமணி         – 1 மஞ்சாடி
2 மஞ்சாடி            – 1 பணவெடை
5 பணவெடை         – 1 கழஞ்சு
8 பணவெடை         – 1 வராகனெடை
4 கழஞ்சு              – 1 கஃசு
4 கஃசு                – 1 பலம்

 

பண்டங்கள் நிறுத்தல்

32 குன்றிமணி – 1 வராகனெடை
10 வராகனெடை – 1 பலம்
40 பலம் – 1 வீசை
6 வீசை – 1 தூலாம்
8 வீசை – 1 மணங்கு
20 மணங்கு – 1 பாரம்

முகத்தல் அளவு

 5 செவிடு  – 1 ஆழாக்கு
 2 ஆழாக்கு – 1 உழக்கு
 2 உழக்கு  – 1 உரி
 2 உரி    – 1 படி
 8 படி    – 1 மரக்கால்
 2 குறுணி  – 1 பதக்கு
 2 பதக்கு  – 1 தூணி

பெய்தல் அளவு

 300 நெல்   – 1 செவிடு
 5 செவிடு  – 1 ஆழாக்கு
 2 ஆழாக்கு  – 1 உழக்கு
 2 உழக்கு   – 1 உரி
 2 உரி    – 1 படி
 8 படி     – 1 மரக்கால்
 2 குறுணி   – 1 பதக்கு
 2 பதக்கு   – 1 தூணி
 5 மரக்கால்  – 1 பறை
 80 பறை    – 1 கரிசை
 48 96 படி   – 1 கலம்
 120 படி    – 1 பொதி.

சிந்திக்க வேண்டியது:

80 ற்கு அடுத்து வர வேண்டிய “ஒன்பது” எண்ணும் சொல் எப்படி 8 ற்கு அடுத்து வருகின்றது?
800 க்கு அடுத்து வர வேண்டிய “தொண்ணூறு” எண்ணும் சொல் ஏன் 80 ற்கு அடுத்து வருகின்றது ?
8000 திற்கு அடுத்து வர வேண்டிய “தொள்ளாயிரம்” என்ற சொல் ஏன் 800 ற்கு அடுத்து வருகின்றது?

விடை:
ஒன்பது என்ற சொல் சங்ககாலத்தில் இல்லாத ஒன்று.
9 ற்கு பயன்படுத்திய சொல் “தொண்டு” ( சான்று : பரிபாடல் 3 , வரி 75 -79 , தொல்காப்பியம், 1358 , மலைபடு கடாம் – ௨௧ )
காலத்தில் “தொண்டு”  என்ற சொல் மறைந்ததால், 80 ற்கு அடுத்து வர வேண்டிய தொன்பது, 8 ற்கு அடுத்து இடம்பெயர்ந்துவிட்டது. அதுபோல் வரிசையாக எண்ணியலின் இறுதிவரை இடம்பெயர்ந்துள்ளது. (பலரின் அலட்சியத்தால் இந்த வரலாற்றுப்பிழை திருத்தப்படாமல் உள்ளது. புத்தங்களிலும் பட்டப் படைப்புகளிலும் கூட திருத்தப்படவில்லை )

எட்டு, தொண்டு
என்பது, தொன்பது,
எண்ணூறு, தொண்ணூறு

என்று தான் வந்திருக்க வேண்டும்.

 சான்றுகள்:

 இருநிழல் படாமை மூவே ழுலகமும்
 ஒருநிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
 பாழெனக் காலென பாகென ஒன்றென
 இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
 ஆறென ஏழென எட்டெனத "தொண்டென"
 - பரிபாடல் 3 , வரி 75 -79

"தொண்டு" தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று...
 - தொல்காப்பியம், 1358

"தொண்டு" படு திவவின் முண்டக நல்யாழ்.
 - மலைபடு கடாம் - 21

இவைகள் எதிலாவது பிழைகள் இருந்தாலே, மன்னித்து அப்பிழையை நீக்க கீழாய் பதியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.

தமிழில் எண்ணிலடங்கா செல்வங்கள் புதைந்துள்ளது. அவற்றைத் தேடிப்பிடித்து பகிர்வோம்; பயனடைவோம்!

வாழ்க தமிழ்!

நன்றி!
-சமரசம்

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.

2 thoughts on “தமிழ் எண்கள்

 • August 11, 2017 at 5:44 pm
  Permalink

  அற்புதம் தோழரே!!

  • August 12, 2017 at 11:44 pm
   Permalink

   உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழரே!
   நண்பர்களுக்கும் பகிருங்கள், தாங்கள் அறிந்த தகவல்களையும் பகிருங்கள்!

   #தமிழ்வாழ்க

Comments are closed.