மருவிய பழமொழிகள்-1

தமிழ் மொழி கடந்து வந்த பல்லாயிரம் ஆண்டுகளின் பாதையில் பல முற்களும், இயற்கை சீரழிவுகளும் பல பாதிப்புளை ஏற்படுத்தியுள்ளன. பல சொற்கள் அழிந்துள்ளன, பல பழமொழிகள் காலத்தால் மருவி இப்போது தவறான பொருளைத் தருகின்றன.

மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு; மனிதனுக்கு அவசியமும் கூட!
அதனால் மருவிய பழமொழிகளைத் திருத்தி, சரியான பொருளறிந்து பின்பற்றுவோம்!

தவறான பழமொழி: "ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். "

சரியான பழமொழி: "அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும். "

விளக்கம்: புரியாமல் எதையும் மனதில் நினைவுகொள்ளக் கூடாது. கற்கும்போது, தெளிவாக புரிந்த பிறகுதான் நினைவில்கொள்ள வேண்டும்.

 

தவறான பழமொழி: "மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே. "

சரியான பழமொழி: "மங்கு திரையை நம்பி ஆற்றில் இறங்காதே! "

விளக்கம்: 'திரை' என்றால் அலை என்று பொருள். 
 மங்குதல் = ஒளி மழுங்குதல். அதாவது "கானல் நீரை நம்பி ஆற்றில் இறங்காதே" என்று பொருள் தருகிறது.வற்றிய ஆற்று மணலில் இறங்கி கானல் நீரை நோக்கி ஏமார்ந்து நடந்து செல்வது இயல்பு. அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பது போலத் தெரிந்தாலும் இறங்க வேண்டாம் என்கிறது இப்பழமொழி.

 

தவறான பழமொழி: "ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் "

சரியான பழமொழி: "ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன். "

விளக்கம்: அக்காலத்தில் சித்த மருத்துவர்கள் மூலிகை செடிகளைக் கொன்று மருந்துகளை உருவாக்குவார்கள். ஆயிரம் வேரையாவது கொன்று ஆராய்ச்சி செய்தவனால் தான் அரை வைத்தியனாகவாவது ஆகியிருக்க முடியும் என்ற கருத்து.

 

தவறான பழமொழி: "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.  "

சரியான பழமொழி: "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு. "

விளக்கம்: சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது.

 

தவறான பழமொழி: "அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான். "

சரியான பழமொழி: "அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் "

 

தவறான பழமொழி: "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்"

சரியான பழமொழி: "ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் "
விளக்கம்: அம்மை நோய்கள் அதிக வெப்பத்தின் காரணமாய் ஏற்படுகின்றன. ஆடி மாதத்தில் அதிகபடியான குளிர்காற்று வீசுவதால் அம்மை நோய் பறந்து விடும் என்பது உண்மை. இதனையே ஆடி காற்றில் அம்மையும் பறக்கும் எனக்கூறினர். இப் பழமொழி நாளடைவில் மருவி ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்’ என திரித்து கூறப்படுகிறது. ஏனென்றால் அவ்வளவு வேகமாய் காற்றடிக்கும். அதுபோல் ‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழைபெய்யும்’. அதாவது ஆடி மாதத்திலேயே பருவக்காற்று அதிகபடியாக வீசும்போது ஐப்பசி மாதம் நல்ல மழை பெய்யும் என்பது. இது பெரும்பாலும் உண்மையாக நிகழ்ந்துள்ளது.

 

தவறான பழமொழி: "கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!"

சரியான பழமொழி: " கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்."

விளக்கம்: இங்கு நாயகன் என்பது கடவுளை குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும்போது கல்லை பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.

 

தவறான பழமொழி: "ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு. "

சரியான பழமொழி: "ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.  "

விளக்கம்: குடும்பச் சண்டைகளில் பிரிந்த உறவுகளை, திருமண நிகழ்வு வாய்ப்பை பயன்படுத்தி , ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் சென்று அழைத்து அவ்வுறவுகளை மீண்டும் செழிக்கச் செய்ய வேண்டும்.

 

தவறான பழமொழி: "கழுதைக்குத்தெரியுமா கற்பூரவாசம்! "

சரியான பழமொழி: "கழு தைக்க தெரியுமாம் கற்பூரவாசம்"

விளக்கம்:  கழு ஒருவகையான கோரைப்புல் அதில் தைக்கப்படும் பாயில் படுக்கும் போது நாசியில் கற்பூர வாசனை அடிக்கும். குழந்தைகளை அந்த பாயில் படுக்கப்போட்டால் பூச்சிகள் கிட்டே வராது. மற்றபடி கழுதைக்கும், மாட்டுக்கும் இச்சொற்றொடரோடு தொடர்பே இல்லை, காலத்தால் மருவியதே!

 

நன்றி!
-சமரசம்

Please share !

சமரசம்

நானும் உங்களை போல் ஒரு தமிழ்க் காதலன். தமிழ் பற்றிய தகவல்களை சேகரித்துப் பகிர்வதற்காகவும், சுய கருத்துக்களை என் எழுத்தின் மூலம் சொல்வதற்க்காகவும் இணையத்தில் எழுதுகிறேன். மேலும் சங்க இலக்கியங்கள், தமிழ் வரலாறு, கலை, கணினி ஆகியவற்றில் ஈடுபாடுகொண்டவன்.